19 வயதில் விமானி… நிலத்தை விற்று மகளின் கனவை நிறைவேற்றிய தந்தை!
Send us your feedback to audioarticles@vaarta.com
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திலால் படேல் எனும் விவசாயி தனது மகளின் கனவை நிறைவேற்றுவதற்காக தனது விவசாய நிலத்தின் ஒருபகுதியை விற்று 19 வயது மகளை விமானியாக்கி இருக்கிறார். இதனால் இந்தியாவின் இளம் வயது பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மைத்ரி படேல்.
சூரத் மாவட்டத்தில் உள்ள ஒல்பாட் பகுதியில் வசித்துவருபவர் மைத்ரி படேல். இவர் தன்னுடைய 8 வயதிலேயே விமானியாக வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். இதற்காகப் பள்ளிப் பருவத்தில் இருந்தே தனது கனவுக்கு உரம்போட்டு கடினமாக உழைத்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்ட அவருடைய தந்தை காந்திலால் தனது மகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததோடு தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்று அமெரிக்காவில் உள்ள விமான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வைத்துள்ளார்.
இதனால் 19 வயதில் மைத்ரி படேல் விமானியாக மாறியிருக்கிறார். மேலும் இவர் விரைவில் பயணிகள் விமானமான போயிங் விமானத்தை ஓட்டப் பயிற்சிப் பெற்று ஒரு சிறந்த விமானியாக உருவெடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஒரு இந்தியத் தந்தை மகளின் கனவுக்காக நிலத்தை விற்று அமெரிக்காவில் படிக்க வைத்து இருக்கும் இந்தச் சம்பவம் தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில் மைத்ரி படேலும் தனது கனவுக்காக அயராது உழைத்து தனது விமானப் பயிற்சியை முடித்து தற்போது இந்தியாவிற்கு வருகைத் தந்துள்ளார். மேலும் குஜராத் முதல்வரான விஜய் ரூபானியை சந்தித்து மைத்ரி படேல் வாழ்த்து பெற்றுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து சோஷியல் மீடியாவில் கருத்துப் பகிர்ந்துகொண்ட விஜய் ரூபானி “இந்தியாவில் ஒரு பெண் 19 வயதில் விமானியாக தொழில்முறை பயிற்சிப் பெற்றுள்ளார். அவர் இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்“ என்று மகிழ்ச்சிப் பொங்க வாழ்த்து தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
CM Shri @vijayrupanibjp today met 19-year-old Maitri Patel, a farmer's daughter from Olpad, Surat, and congratulated her on becoming the youngest female commercial pilot after receiving vocational training in the US and also wished this pride of Gujarat a sky-touching career. pic.twitter.com/R4qHdbOQkb
— CMO Gujarat (@CMOGuj) September 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout