இரட்டை குழந்தைகள் இறந்த நிலையில் விவசாயிக்கு கொரோனா!!! மனஅழுத்தத்தால் ஏற்பட்ட விபரீதம்!!!
- IndiaGlitz, [Monday,August 31 2020]
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அவர் ஒரு விவசாயி என்றும் கடந்த வாரத்தில் அருவடைய இரட்டைக் குழந்தைகள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இரட்டைக் குழந்தைகள் இறந்த சோகத்தில் இருந்தவருக்குத் திடீரென்று கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனால் எலுரு பகுதியில் உள்ள ஆசிரம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் மனஅழுத்ததின் காரணமாக மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் உலகமே அரண்டு போயிருக்கிறது. பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மனிதர்களின் தூங்கும் நேரம் முற்றிலும் குறைந்து இருப்பதாக மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது. இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மேலும் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாகவும் இதனால் சிலர் விபரீத முடிவுகளை எடுத்து விடுதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மனநல பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கூடுதல் கவனிப்பும் சிகிச்சையும் தேவை என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.