பரிதாபமாக விவசாயி உயிரிழப்பு....! காரணமான போலீஸ் சஸ்பெண்ட்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
விவசாயியை தாக்கி அவர் உயிரிழந்ததில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் இடையப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்ற விவசாயி. தனது நண்பருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பும் போது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் இவர்களை காவலர்கள் மடக்கியுள்ளனர். அப்போது முருகேசன் மதுபோதையில் இருந்ததால், காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர், முருகேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதன்பின் மயங்கி விழுந்த முருகேசனை, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து விவசாயியை, காவல் ஆய்வாளர் தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் டிஜிபி, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com