பசுமாடு வேலி தாண்டியதால்… காலை துண்டாக வெட்டியக் கொடூரச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,January 12 2021]

மழைப் பருவம் என்பதால் தற்போது தஞ்சை பகுதியில் பயிர் சாகுபடி சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் வேலி தாண்டி வயல் பகுதியில் தவறுதலாக மேய்ந்து விட்ட ஒரு காளை மாட்டின் காலை அந்த வயலின் உரிமையாளர் துண்டாக வெட்டி உள்ளார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட பலரும் இப்படியுமா? ஈவு, இரக்கம் இல்லாமல் செய்வது என வெதும்பி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பள்ளியக்ஹாரம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ஆனந்த் என்பவருக்கு சொந்தமாக 2 காளை மாடுகள் இருக்கின்றன. இந்த மாட்டில் ஒரு காளை மாடு தவறுதலாக மந்திரி என்பவரின் வயல் வெளியில் மேய்ந்து இருக்கிறது. இதையடுத்து இந்த மாடு எப்படி எங்கள் தோட்டத்தில் மேயலாம் என ஆத்திரப்பட்ட மந்திரியின் மைத்துனர் காமராஜ் அரிவாளை கொண்டு காளை மாட்டின் காலை துண்டாக வெட்டி இருக்கிறார்.

இதனால் கால் எலும்பு முறிந்து போன அந்த காளை மாடு தோட்டத்திலேயே சரிந்து விழுந்து இருக்கிறது. இதையடுத்து தகவல் அறிந்து அந்த இடத்திற்குச் சென்ற ஆனந்த் தன்னுடைய காளை மாட்டை பார்த்து கதறி அழுது இருக்கிறார். பின்பு மருத்துவர்களை அழைத்து அந்த காளை மாட்டிற்கு சிகிச்சையும் அளித்து இருக்கிறார். ஆனால் கடுமையான எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்ட அந்த காளை மாட்டை சரிசெய்ய முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தை அடுத்து துக்கம் தாங்காத ஆனந்த் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கொரில்லாவிற்கும் கொரோனா பாதிப்பு… தொடரும் பட்டியல்!!!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இன்று வரை 9 கோடியே 14 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

10 மாநிலங்களுக்குப் பரவிவிட்ட பறவைக் காய்ச்சல்… பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!!!

கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் உறுதிச் செய்யப்பட்ட H5N8 பறவைக் காய்ச்சல் தற்போது 10 மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதான் விராத் கோஹ்லி குழந்தையின் புகைப்படமா? சகோதரர் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதும்

'மாஸ்டர்' டிக்கெட்: கலெக்டரிடம் புகார் அளித்த விஜய் ரசிகர்களால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீசை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள்

நான் வராததற்கு ஒரு லேடி தான் காரணம்: சுரேஷ் குறிப்பிட்ட அந்த லேடி யார்?

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக எவிக்டான போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஷிவானி, சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய மூவர் தவிர மற்ற அனைவரும் வந்து விட்டார்கள்