வாங்கிய கடனை கட்ட முடியல… விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி!!!

  • IndiaGlitz, [Thursday,September 10 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாண்டாவில் பிந்தரன் எனும் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் கடன் தொல்லை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 38 வயதான ராம் நரைன் என்பவர் வங்கியில் இருந்து ரூ.2.5 லட்சம் கடனைப் பெற்றிருக்கிறார். அதோடு கிணறு தோண்ட வேண்டும் என்பதற்காக உறவினர்களிடம் இருந்து மேலும் ரூ.2 லட்சத்தையும் கடனாக வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் ராம் நரைன் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராம் நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். இதன்காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று சிகிச்சை பலன் இன்றி ராம் நரைன் இறந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது போலீசார் இச்சம்பவத்தை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இது தற்கொலையாக இல்லாமல் வேறு மாதிரியாக இருக்குமோ என்ற ரீதியிலும் விசாரணை நடைபெறுவதாக அப்பகுதியின் போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்து உள்ளார்.