ரசிகர்கள் வேண்டுகோள்: கணவரின் புகைப்படத்தை அப்லோட் செய்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ’பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை தனது கணவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’. மக்களின் அமோக வரவேற்பை இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் பரினா ஆசாத். இவருடைய கேரக்டர் வில்லத்தனமாக இருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருபவர் என்பதால் இவருக்கு ஃபாலோயர்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆன நிலையில் கணவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தனது இன்ஸ்டாகிராமில் பரினா ஆசாத் தனது கணவரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments