மகேஷ்பாபு படத்தில் இணைந்த பாலிவுட் கலைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் 'பாரத் அனே நேனு' திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாலிவுட்டின் பிரபல பாடகர் ஃபர்ஹான் அக்தரை பாட வைத்துள்ளார். இவர் தென்னிந்திய மொழியில் பாடும் முதல் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாரத் அனே நேனு ’ படத்தில் ஃபர்ஹான் அக்தர் பாடிய ‘I Dont Know...’ எனத் தொடங்கும் பாடலை பதிவு செய்யும் போது அவர் அற்புதமாக பாடிக் கொடுத்ததாகவும், இந்த பாடலை கேட்ட அனைவரும் தெலுங்கு மொழியே தெரியாத ஒருவர் எப்படி இவ்வளவு கச்சிதமாக தெலுங்கு வார்த்தைகளை உச்சரித்தார் என்றும் ஆச்சரியம் அடைந்ததாகவும் தேவிஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.
கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வெற்றிக்கு உதவிய நாயகன் மகேஷ் பாபு, இயக்குநர் கொரட்லா சிவா, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பினருக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும், ஃபர்ஹான் அக்தருடனான இந்த இசைப்பயணம் மேலும் தொடரும்’ என்றும் தேவிஸ்ரீ பிரசாத கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com