டேட்டா லீக் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து விலகினார் பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஃபேஸ்புக் பயனாளிகளின் டேட்டாக்கள் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ச் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தால் திருடப்பட்டு அவை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும், டிரம்பின் வெற்றிக்கு இது பெரிதும் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளின் ரகசியங்கள் லீக் ஆனதால் ஃபேஸ்புக்கில் இருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தார் தனது வெரிபைடு ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய பர்சனல் ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்துவிட்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும் பர்ஹான் அக்தார் லைவ் பக்கம் மட்டும் எப்போதும் போல் இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Good morning. This is to inform you all that I have permanently deleted my personal Facebook account.
— Farhan Akhtar (@FarOutAkhtar) March 27, 2018
However, the verified FarhanAkhtarLive page is still active.
ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க், டேட்டாக்கள் லீக் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதி அளித்தபோதிலும் பிரமுகர்கள் மட்டுமின்றி சாதாரண பயனாளிகள் பலரும் ஃபேஸ்புக்கில் இருந்து விலகி வருகின்றனர். ஃபேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்திற்கு இதுவொரு மிகப்பெரிய பின்னடவு என்றே கூற வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com