close
Choose your channels

சூர்யா ஜோடியாக நடித்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!

Wednesday, September 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தனது மகனுடன் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் சூர்யா நாயகிக்கு இவ்வளவு பெரிய மகனா? என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’ஸ்ரீ’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ருதிகா. பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான இவர் இந்த படத்தில் 15 வயதிலேயே நாயகியாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதன் பின்னர் ஆல்பம், நல தமயந்தி, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்

இந்த நிலையில் சினிமாவுக்கு திடீரென முழுக்கு போட்டுவிட்டு அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். அவருக்கு ஆரவ் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்ருதிகா தனது சமூக வலைத்தளத்தில் குடும்பத்தினர்களுடன் கூடிய விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

தற்போது 34 வயதாகும் ஸ்ருதிகா தனது 10 வயது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அதிக அளவில் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சூர்யா நாயகிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா? என்று ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வயதிலும் ஸ்ருதிகா, ‘ஸ்ரீ’ படத்தில் பார்த்தது மாதிரியே அழகாக உள்ளார் என்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஸ்ருதிகாவின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

View this post on Instagram

We r all set for a bang on sunyay??

A post shared by Shrutika Arjun (@shrutika_arjun) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment