'வலிமை' திரையிடும் தியேட்டரில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க முயற்சி: ரசிகர்கள் அதிர்ச்சி

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் இன்று காலை முதல் காட்சி சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ரிலீசாகி உள்ளது என்பதும் இந்த படத்தின் முதல் காட்சி முடிவடைந்த நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த திரையரங்கில் ரசிகர்கள் நாட்டு வெடிகுண்டு வெடிக்க வைக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்லில் உள்ள கேஎஸ் என்ற திரையரங்கில் ’வலிமை’ படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதாக தெரிகிறது. இந்த படத்தை திரையிட உரிமம் இறுதி நேரத்தில் கிடைக்காததால் முதல் காட்சி தாமதமானதாகவும், இதனால் ரசிகர்களை உள்ளே விட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் ’வலிமை’ படத்தை திரையிட கோரியும் தியேட்டர் கதவை திறக்க கோரியும் ஆவேசமாக கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் திரையரங்கின் கதவில் நாட்டு வெடிகுண்டை கட்டி வெடிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக துறையினர் விரைந்து வந்து நாட்டு வெடிகுண்டை அகற்றினர். இது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.