தேர்தல் பிரச்சாரத்தில் ஆரி கோஷம் போட்ட ரசிகர்கள்: கமல் இன்ப அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் முதல் மூன்று வாரங்கள் அமைதியாக இருந்த ஆரி, அதன்பின் ஆட்டத்தை தொடங்கினார் என்பதும் அவர் தொடங்கிய ஆவேசமான ஆட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதுவரை நடந்த 4 சீசன்களில் ஆரிக்கு இருப்பது போல் அதிக பட்ச ரசிகர்கள் இருந்ததில்லை என்றே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் மற்ற சீசன்களில் டைட்டில் வின்னர் யார் என்பதை கணிக்க முடியாத அளவில் இருந்த நிலையில் இந்த சீசனில் மட்டும் 50 நாட்களுக்கு முன்பே ஆரி தான் டைட்டில் வின்னர் என பல ரசிகர்கள் கணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தீவிரமாக சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்வாறு அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென ’ஆரி.. ஆரி.. ஆரி.. என கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தான் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவருக்கு இத்தனை பெரிய ரசிகர் கூட்டமா? என கமல் இன்ப அதிர்ச்சியில் இருந்த காட்சி அந்த வீடியோவில் உள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Adei #aari haters, pr gumbalnu kadharuvingale, idhuku enna solla poringa, silara set panni aari aarinu katha sonnangana .
— Dharsan (@dhars45) January 6, 2021
Haters nilamaya ninachadha paridhama iruku ?? #biggbosstamil #BiggBossTamil4#AariArjunan@vijaytelevision @EndemolShineIND pic.twitter.com/hSyBBbjDcM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com