கம்பீரமாக இருந்த கேப்டனா இவர்? விஜயகாந்த் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் ரஜினி கமலுக்கு இணையாக பல வெற்றி படங்களை கோலிவுட்டில் விஜயகாந்த் கொடுத்து வந்தார் என்பதும் அவர் திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் புகுந்து தொடர் வெற்றிகளை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே.

தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த் ஒரு சில ஆண்டுகளிலேயே எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில வருடங்களாக விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலக்குறைவுக்கு பின் அவர் சினிமா அரசியல் ஆகிய இரண்டிலுமே ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் தனது மகனுக்கு விஜயகாந்த் கேக் ஊட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் மெலிந்து இருப்பதை பார்த்து வருத்தத்துடன் கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டும் பழைய விஜயகாந்த் ஆக வர வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.