close
Choose your channels

அனுஷ்காவின் சிவராத்திரி வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்: யார் காரணம்?

Monday, February 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவராத்திரி தினத்தில் அனுஷ்கா ஷெட்டி வழிபட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இதற்கெல்லாம் காரணம் ஆர்யா தான் என கமெண்ட் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா என்பதும் குறிப்பாக ’அருந்ததி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு அபாரமாக இருந்ததை அடுத்து ’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய படங்களில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதன் பிறகு அவர் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக அதிக படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சிவராத்திரி தினத்தில் சிவ பூஜையில் கலந்து கொண்ட அனுஷ்காவின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அனுஷ்கா மிகவும் குண்டாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் ’இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தது தான் என்றும் அந்த படத்திற்காக அவர் உடல் எடை கூடிய பின் அவரால் மீண்டும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

அனுஷ்காவுக்கு முன்பே திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் இன்னும் இளமையான தோற்றத்தில் ஸ்லிம்மாக இருக்கும் நிலையில் அனுஷ்கா மிகவும் குண்டாகி இருப்பது அவரது ரசிகர்களுக்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment