அனுஷ்காவின் சிவராத்திரி வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்: யார் காரணம்?

  • IndiaGlitz, [Monday,February 20 2023]

சிவராத்திரி தினத்தில் அனுஷ்கா ஷெட்டி வழிபட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இதற்கெல்லாம் காரணம் ஆர்யா தான் என கமெண்ட் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா என்பதும் குறிப்பாக ’அருந்ததி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு அபாரமாக இருந்ததை அடுத்து ’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய படங்களில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதன் பிறகு அவர் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக அதிக படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சிவராத்திரி தினத்தில் சிவ பூஜையில் கலந்து கொண்ட அனுஷ்காவின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அனுஷ்கா மிகவும் குண்டாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் ’இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தது தான் என்றும் அந்த படத்திற்காக அவர் உடல் எடை கூடிய பின் அவரால் மீண்டும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

அனுஷ்காவுக்கு முன்பே திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் இன்னும் இளமையான தோற்றத்தில் ஸ்லிம்மாக இருக்கும் நிலையில் அனுஷ்கா மிகவும் குண்டாகி இருப்பது அவரது ரசிகர்களுக்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

More News

சாப்ட்வேர் இஞ்சினியர்ன்னா சாஃப்ட்டா இருப்பேன்னு நினைச்சியா?  'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' டிரைலர்..!

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவான 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'  என்ற படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில்

எனக்கு யாரும் ஆன்மீக பாடம் எடுக்க வேண்டாம்.. நடராஜர் டாட்டூவை முதுகில் வைத்த 'லியோ' நடிகையின் விளக்கம்..!

தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்துவரும் நடிகை நடராஜர் டாட்டூவை தனது முதுகில் பதிவு செய்துள்ள நிலையில் 'எனக்கு யாரும் ஆன்மீகம் குறித்து பாடம் எடுக்க வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது பரபரப்பை

'ஏகே 62' படத்தில் வில்லனாகிறாரா மகிழ்திருமேனியின் ஹீரோ?

மகிழ்ந்திருமேனியின் முந்தைய படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஒருவர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள 'ஏகே 62' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

பிரமாண்டமான புது வீட்டில் ரசிகர்களுக்கு விருந்து வைத்த தனுஷ்.. வைரல் புகைப்படங்கள்..!

சென்னையின் முக்கிய பகுதியான போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் புது வீடு கட்டி வந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில்

விஜய்யின் 'லியோ'வில் விஜய்சேதுபதி? ஹிண்ட் கொடுத்த படக்குழு..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ' படம் ஒரு லோகேஷின் LCU படம் என்றும் இந்த படத்தில் லோகேஷ் கதாகராஜின் முந்தைய படங்களின் கேரக்டர்கள் வருவதற்கு