என்ன ஆச்சு நயன் தாராவுக்கு? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Thursday,December 08 2022]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அதுகுறித்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது நீண்டநாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பிறகு அவர் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்த ’கனெக்ட்’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கனெக்ட்’ படத்தில் நயன்தாராவின் ஸ்டில் ஒன்று தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த ஸ்டில்லை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாராவின் மொத்த அழகும் என்னாச்சு என்றும் எதற்காக அவர் இந்த கோலத்தில் இருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் நயன்தாரா இந்த படத்திற்காக போட்ட மேக்கப் தான் இது என்றும் அவரது உண்மையான அழகு உண்மையிலேயே சொக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் ஒரு சிலர் பதிவு செய்து வருகின்றனர். மொத்தத்தில் நயன்தாராவின் இந்த ஸ்டில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.