கொரோனா பரபரப்பிலும் படப்பிடிப்புக்கு சென்ற முழுமாத கர்ப்பிணி நடிகை

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ என்ற சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே

இந்தநிலையில் ஆல்யா மானசா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஆல்யா மானசா ஒரு விளம்பரப் படத்தில் கணவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தின் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் ஓய்வு எடுக்க வேண்டிய நிறைமாத கர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்தது சரியா என சஞ்சிவ் கார்த்திக்கை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதான் சஞ்சீவ் கார்த்திக் தனது மனைவியை நடிக்க வைத்ததாகவும், ஆல்யாவின் முழு சம்மதத்துடன் தான் இந்த படப்பிடிப்பு நடந்தது என்றும் கூறப்படுகிறது

More News

கொரோனா விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு!

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாதாரண குடிமக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை தாக்கி வருகிறது

“மெகா கொரோனா பள்ளம்“ பார்த்து கவனமாகச் செல்லுங்கள்; கவனம் ஈர்த்த விளம்பர பலகை!!! 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள குழியை சீரமைக்க கோரி இந்திய யூனியன் முஸலீம் லீக் கட்சி

கொரோனாவுக்கு மருந்தாக கோமியம் குடிக்க வைத்த பாஜக நிர்வாகி கைது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்காக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

விதவையாக விருப்பமில்லை, விவாகரத்து வேண்டும்: நிர்பயா குற்றவாளி மனைவி திடீர் மனு தாக்கல்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- உ.பி. முதல்வர் யோகியின் அதிரடி அறிவிப்பு!!! 

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காகப் பல மாநிலங்கள் விடுமுறை அளித்து, பள்ளிகளை இழுத்து மூடி வருகின்றன.