சமந்தாவின் உடல்நிலை.. நாகசைதன்யாவுக்கு குவியும் வேண்டுகோள்!

நடிகை சமந்தா தான் உடல்நலக் குறைவுடன் இருப்பதால் சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் நேற்று தெரிவித்த நிலையில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை சமந்தா மிகவும் அரிதான நோயான மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த நோய்க்காக தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் தான் முழுமையாக குணம் அடைந்து விடுவேன் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த உருக்கமான பதிவு நேற்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் சமந்தா விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பல திரையுலக பிரபலங்களும் நீங்கள் மன வலிமை உள்ளவர் என்றும் அதனால் கண்டிப்பாக இதில் நீங்கள் இந்த நோயில் இருந்து மீண்டு வருவீர்கள் என்றும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமந்தாவின் இந்த பதிவு குறித்து நாகசைதன்யா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்பதால் ரசிகர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமந்தாவுக்கு ஒரு நாலு வார்த்தை நல்லதாக சொல்லி ஆறுதல் கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சமந்தாவுக்கு நாக சைதன்யா ஆறுதல் கூறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.