'தளபதி 63' படப்பிடிப்பில் ரசிகர்களின் மாஸ் ரியாக்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் கூடி, அவரை பார்ப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காசிமேடு N4 பீச் அருகே 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரவு நேரத்தில் நடந்தபோதிலும் படப்ப்பிடிப்பு குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய்யை பார்க்க பெருமளவில் கூடிவிட்டனர்.
இந்த நிலையில் தனக்காக காத்திருந்த ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத விஜய், அந்த இரவு நேரத்திலும் ரசிகர்கள் முன் தோன்றி மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விஜய்யை பார்த்த ரசிகர்களின் மாஸ் ரியாக்சன் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Thalapathy63 night shoot pic.twitter.com/QAXPJv4uve
— Thalapathy Vijay (@Actor_Vijay) March 18, 2019
Video - #Thalapathy #Vijay happily meets his fans Yesterday during #Thalapathy63 shoot. @Thalapathy63Off #Thalapathy63Shoot pic.twitter.com/XRLRmVyvTj
— #Thalapathy63 (@Thalapathy63Off) March 18, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments