வைரஸ் தாக்குதலை முறியடித்து சாதிப்பார்களா விஜய் ரசிகர்கள்?

  • IndiaGlitz, [Thursday,January 18 2018]

சமூக வலைத்தளங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் விஜய் ரசிகர்கள் என்றால் அது மிகையில்லை. விஜய் குறித்த எந்தவொரு செய்தி வெளிவந்தாலும் அதை டிரெண்டுக்கு கொண்டு வருவதுதான் இவர்களின் முதல் வேலை

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான பட்டியலில் சிறந்த துணை நடிகருக்கான விருது பட்டியலில் 'மெர்சல்' படத்தில் நடித்த விஜய் பெயரும் உள்ளது. இந்த விருது விஜய்க்கு கிடைக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் வரும் 20ஆம் தேதி வரை வாக்களிக்க வேண்டும். ஆன்லைனில் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து விஜய்க்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்களிக்கும் இணையதளம் திடீரென வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் விடா முயற்சியுடன் வாக்களிக்க முயற்சித்து  வருகின்றனர். வைரஸ் தாக்குதலை முறியடித்து விஜய்க்கு இந்த விருது கிடைக்கும் வகையில் அதிக வாக்குகளை விஜய் ரசிகர்கள் பதிவு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

கார்த்தியின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் பதிலடி

தமிழ் திரையுலகில் அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக பெரிய நடிகராக இருந்து வரும் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது

சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் விஜே ரம்யா

தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜே ரம்யா ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

சுந்தர் சியின் 'கலகலப்பு 2' சென்சார், ரன்னிங் டைம் மற்றும் ரிலீஸ் தேதி

கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகமான 'கலகலப்பு 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது.

விஜய்-வினோத் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

கார்த்தி நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.