வைரஸ் தாக்குதலை முறியடித்து சாதிப்பார்களா விஜய் ரசிகர்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் விஜய் ரசிகர்கள் என்றால் அது மிகையில்லை. விஜய் குறித்த எந்தவொரு செய்தி வெளிவந்தாலும் அதை டிரெண்டுக்கு கொண்டு வருவதுதான் இவர்களின் முதல் வேலை
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான பட்டியலில் சிறந்த துணை நடிகருக்கான விருது பட்டியலில் 'மெர்சல்' படத்தில் நடித்த விஜய் பெயரும் உள்ளது. இந்த விருது விஜய்க்கு கிடைக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் வரும் 20ஆம் தேதி வரை வாக்களிக்க வேண்டும். ஆன்லைனில் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த தகவலை அனைவருக்கும் பகிர்ந்து விஜய்க்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வாக்களிக்கும் இணையதளம் திடீரென வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் விடா முயற்சியுடன் வாக்களிக்க முயற்சித்து வருகின்றனர். வைரஸ் தாக்குதலை முறியடித்து விஜய்க்கு இந்த விருது கிடைக்கும் வகையில் அதிக வாக்குகளை விஜய் ரசிகர்கள் பதிவு செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com