ரஜினி வீட்டின் முன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Sunday,December 12 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ரசிகர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தின் முன் கேக் வெட்டி ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கோஷமிட்டனர்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு 12 மணிக்கு ரஜினிகாந்தின் வீட்டின் முன் திடீரென ரசிகர்கள் கூடி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை டைட்டில் பட்டம் இந்த ஜோடிக்கு தான்! குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது என்பதும் தெரிந்ததே.

விஜய்யின் 'பீஸ்ட்': மாஸ் புகைப்படத்துடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில்

மூன்று ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரேஸில் களமிறங்கும் ஜெய்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் அஜித் மோட்டார் ரேஸில் கலந்து கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அஜித்தை அடுத்து நடிகர் ஜெய்யும் மோட்டார் பந்தயங்களில்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக டிசம்பர் 11,12 ஆகிய இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு

'தளபதி 66' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷா? அவரே அளித்த விளக்கம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.