ரஜினி வீட்டிற்கு வந்து குவியும் அஞ்சல் அட்டைகள்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்த வாத, விவாதங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினி வீட்டிற்கு அஞ்சல் அட்டைகள் குவிந்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் திட்டத்தை அவரது ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனை அடுத்து அவரது வீட்டிற்கு அஞ்சல் அட்டைகள் வந்து குவிந்து கொண்டிருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

ஏழை எளிய மக்களும் ஏற்றம் கண்டிட நீ வா தலைவா
நேர்மையானவர்கள் துணிச்சலாக அரசியலுக்கு வர, நீ வா தலைவா

மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தை கொண்டுவர உங்களை ஆண்டவன் அனுப்பி இருக்கான் வா தலைவா வா உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

மக்கள் மனதில் மன்னனாக வாழ்கிறாய்
இது தங்களுக்கு கிடைத்த அரிய வரம்
தாங்கள் அரசியலில் ஈடுபட்டால் மக்களுக்கு மாற்றம் வரும்

போன்ற வாசகங்கள் அந்த அஞ்சலட்டையில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு ரஜினியின் ரியாக்சன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

முட்டையில் ஓவியம்.. சர்வதேச விருது வென்ற கோவை மாணவி!!!

முட்டையைப் பார்த்தாலே ஆம்லேட் போட்டு ஒருபிடி பிடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த முட்டையில் 50 தேசிய தலைவர்களின்

பா ரஞ்சித் உடன் மோதும் பிரபல நடிகர்: வைரலாகும் புகைப்படம் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' என்ற படத்தை கடந்த 2018ஆம் ஆண்டு இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே 

சர்ச்சைக்குரிய கேரள ப்ரீ வெட்டிங் போட்டோஸ்… இணையத்தில் இருந்து நீக்கமா???

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி சர்ச்சைக்குரிய சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர்.

மனைவியோடு சேர்ந்து கொண்டு பெற்றத் தாயையே தீ வைத்து கொளுத்திய தலைமகன்…

 உத்திரப் பிரேதேசத்தின் ஜலாலாபாத் எனும் பகுதியில் பெற்ற தாயையே அவரது மகன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூசிலாந்தின் அமைச்சராகப் பொறுப்பு ஏற்று இருக்கும் முதல் இந்தியப் பெண்மணி!!!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி ஒருவர் நியூசிலாந்து நாட்டின் அமைச்சாராக பொறுப்பு ஏற்றிருக்கிறார்.