close
Choose your channels

'உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க... 'காபி வித் காதல்' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

Friday, April 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை மாளவிகா சர்மா செய்த செயலை பார்த்து உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு என ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தில் தியா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா சர்மா. தற்போது அவர் சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகை மாளவிகா சர்மா இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு சுமார் இரண்டு லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெயிலில் செருப்பு இல்லாமல் இருக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கு தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செருப்பு வாங்கி அதை மாணவர்களின் கால்களில் மாட்டிவிடும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

வெயில் காலத்தில் செருப்பு இல்லாமல் மாணவ மாணவிகள் நடமாடுவது என்பது மிகவும் கொடுமையானது என்றும் அதனால் தான் 40 பள்ளிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவி செய்து வரும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செருப்புகளையும் புத்தகங்களையும் வாங்கித் தருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பலர் ’உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு’ என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment