திருமணம் ஆகப்போகும் நேரத்தில் இது தேவையா? சமந்தாவை வறுத்தெடுத்த ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை சமந்தா தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் அவருக்கு விரைவில் நடிகர் நாகார்ஜூனன் மகன் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெறவுள்ளது. நாகார்ஜூனனின் கெளரவமான குடும்பத்திற்கு மருமகளாகும் பாக்கியம் சமந்தாவுக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமே என்று டோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.
ஆனால் அந்த கெளரவத்திற்கு தலைக்குனிவு ஏற்படும் வகையில் சமந்தாவின் சமீபத்திய சமூகவலைத்தள பதிவு ஒன்று இருந்ததாக அவருடைய ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். ஒரு குட்டி விடுமுறை சுற்றுலாவுக்கு கிளம்புவதாக தனது சமூக வலைத்தளத்தில் சமந்தா பதிவு செய்தார். அதோடு விட்டிருக்கலாம், ஆனால் அந்த பதிவில் அவர் தனது உள்ளாடைகளின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த செய்கை அவரது ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் ஆத்திரமும் அருவருப்பையும் அடைய செய்துள்ளது. உங்களது ரசிகராக இருப்பதை அவமானமாக கருதுகிறேன் என்று ஒருவரும், நல்ல குடும்ப வாழ்க்கை கிடைக்க போகிற இந்த தருணத்தில் இந்த பதிவு தேவையா? என்று இன்னொருவரும் கமெண்ட் பகுதியில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
ஒரு பெண் தன்னுடைய அந்தரங்க உடைகளை பதிவு செய்துதான் லைக் வாங்க வேண்டும் என்ற நிலை மிகவும் கேவலமானது என்று ஒருவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இந்த நபரை சமந்தா பிளாக் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா தவறான எண்ணம் எதுவும் இல்லாமல் வெகுளித்தனமாக கூட இந்த பதிவை பதிவு செய்திருக்கலாம். ஆனாலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்ப்பது சமந்தாவின் எதிர்கால குடும்ப வாழ்க்கைக்கும், திரையுலக வாழ்க்கைக்கும் நல்லது என்பதே அவரது நலம் விரும்பிகளின் எண்ணமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com