8 பேர் பலி, பல ஆயிரம் கோடி சேதம்: ஃபானி புயலால் உருக்குலைந்த ஒடிஷா!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று ஒடிஷா மாநிலம் வழியே கரையை கடந்த ஃபானி புயல், அம்மாநிலத்தின் பெரும்பகுதியை உருக்குலைய செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புயலால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஃபானி புயல் மீட்புப்பணிக்காக ரூ.1000 கோடியை மத்திய அரசு உடனடியாக அறிவித்துள்ளது.
நேற்றைய புயலின்போது மணிக்கு 245 கிமீ வேகம் வரை சூறாவளி காற்று வீசியதால் பல லட்சம் தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்தன. மேலும் பெரும்பாலான பகுதிகளில் மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்துள்ளதால் அம்மாநிலத்தின் பெரும்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. கல்லூரி வளாகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தலைகுப்புற கவிழ்ந்த காட்சியின் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக கோவில் நகரமான பூரி நகரில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு அவர்கள் புயல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மீண்டும் மின்சார இணைப்பு கிடைக்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று மின்சார துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒடிஷாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும், பெரும்பாலான ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. புவனேஷ்வர் விமான நிலையத்தின் மேற்கூரை புயல் காற்றால் வீசியெறியப்பட்டுள்ளதால் அங்கு மீட்புப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புயல் குறித்து பிரதமர் மோடி கூறியபோது, 'முதல்கட்டமாக மீட்புப்பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், நாட்டு மக்கள் ஒடிஷா மக்களுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments