ஒடிஷாவை உருக்குலைய செய்ய காத்திருக்கும் ஃபானி புயல்!

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் அதிதீவிரமடைந்து தற்போது ஒடிஷாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் ஒடிஷாவில் இந்த புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் புயலால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க தேசிய பேரிடர் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இன்று பிற்பகல் சுமார் 200 கிமீ வேகத்தில் ஒடிஷாவின் பூரி பகுதியில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது பயங்கர காற்றும் கனமழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலின்போது கடலோர பகுதியில் 170 முதல் 200 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் குறிப்பாக கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், கேந்த்ப்டா ஆகிய பகுதிகளில் மிககனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்த பகுதியில் உள்ள சுமார் 11 லட்சம்பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் எழுபது உயரதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். 18 மாநிலத்தில் இருந்து பேரிடர் மீட்புக்குழுக்களும், 525 தீயணணப்புத்துறை குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். இந்த புயலால் ஒரு உயிர் கூட சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News

 ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவிருப்பதாக

 இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டியவர் இன்று கோடீஸ்வரர்! ஒரு ஆச்சரிய தகவல்

ஆட்டோ ஓட்டுபவர்கள் நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டினாலும் பெட்ரோல் செலவு போக குடும்பத்தை ஓட்டவே கஷ்டப்பட்டு வரும் நிலையில் பெங்களூரை சேர்ந்த சுப்பிரமணி என்ற ஆட்டோ டிரைவர்

 மீண்டும் இணையும் 'தடம்' கூட்டணி!

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அருண்விஜய் இரட்டை வேடங்களில் சூப்பராக நடித்திருந்தார்.

ஓடும் காரில் தந்தைக்கு மாரடைப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட 10 வயது மகன்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கார் ஓட்டிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடும் காரை சாமர்த்தியமாக நிறுத்தி

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இருக்கு: நடிகர் தினேஷ்

பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் தினேஷ் நடித்து முடித்துள்ள 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.