கரையை கடக்க துவங்கியது ஃபானி: பலத்த காற்றுடன் கனமழை
- IndiaGlitz, [Friday,May 03 2019]
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று ஒடிஷாவில் கரையை கடக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே ஃபோனி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஃபானி புயல் பலத்த சீற்றத்துடன் கரையை கடந்து வருவதால் ஒடிசாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை அதி தீவிர ஃபானி புயலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிஷாவின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் புயலின் தாக்கம் இருப்பதால் அங்கும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவி்ல் உள்ள முக்கிய இரண்டு துறைமுகங்களான கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது