டைனோசர் 2 கால்களுடன் இறகுகூட வைத்திருக்குமா??? புதுவகை உயிரினத்தின் படிமம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டின் பழங்கால நீர்நிலை ஒன்றில் இருந்து ஒரு சிறிய வகை டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த டைனோசரின் படிமத்திற்கு வெறுமனே 2 கால்கள் மட்டும்தான் இருக்கிறது. அதோடு கோழிகளுக்கு இருக்கும் முடிகளைப் போன்று தனித்துவமான, கடினமான இறகுகளும் இருக்கின்றன. இதைப் பார்த்தால் இப்படி ஒரு விசித்திர டைனோசரை இதற்குமுன் பார்த்திருக்க முடியாது என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
காரணம் கிட்டத்தட்ட 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும்பாலான டைனோசர்களுக்கு இறகுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி இருந்த இறகுகள் தனித்துவமான வகையில் பறவைகளை போலவே காட்சி அளித்ததாம். ஆனால் தற்போது வடகிழக்கு பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் டைனோசர் உருவத்தில் கோழி மாதிரியே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த டைனேசார் வெறுமனே இரண்டு கால்களுடன் நீளமான, தடிமனான ரிப்பன் (புரேட்டோஃபெதர்ஸ்) போன்ற முடியை வைத்திருக்கிறது.
110 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த டைனோசர் உருவத்தில் சிறியதாக இருப்பதோடு சிறிய முதுகெலும்புகளைக் கொண்ட பூச்சி, தவளை, பல்லி போன்ற விலங்குகளை வேட்டையாடி உயிர் வாழ்ந்து இருக்கலாம் என்றும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. ஜுராசிக் வகைகளில் சிறிய இனமான இந்த டைனோசரை உபிராஜாரா ஜுபாடஸ் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்து அழைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout