நானும் இந்திய பிளேயர் தான்: மைதானத்திற்குள் புகுந்த பார்வையாளரால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு மைதானத்துக்கு வந்த ஒரு பார்வையாளர் ஒருவர் நானும் இந்திய வீரர் தான் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்த பார்வையாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் புகுந்து மற்ற வீரர்களை போல பீல்டிங் செய்ய தொடங்கினார். இதைக் கண்ட பாதுகாவலர் உடனே அந்த நபரை வெளியேறுமாறு கூறினார். ஆனால் நானும் ஒரு இந்திய வீரர் தான், இந்திய ஜெர்ஸி போட்டு இருக்கின்றேன் என்று கூற அதன் பின்னர் மைதான பாதுகாவலர்கள் அந்த நபரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்திய ஜெர்ஸி அணிந்து கொண்டு மைதானத்தில் அட்ராசிட்டி செய்த அந்த பார்வையாளரை கண்டு இந்திய வீரர்கள் சிரித்த காட்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் நேற்று முடிவடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
A pitch invader during #INDvENG test match trying to convince the ground security that he is an Indian player. #ENGvIND pic.twitter.com/4ndOdqiL2q
— Arrow News (@ArrowBulletin) August 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments