அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மீது கேஸ் போடுவேன்: மிரட்டல் விடுத்த ரசிகர்..! என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மீது கேஸ் போடுவேன் என மிரட்டல் விடுத்த ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திடீரென சமீபத்தில் இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து விளக்கமளித்தாலும் ரசிகர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் ’அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் படக்குழுவினர்கள் மீது கேஸ் போடுவேன் என மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ரசிகர், ‘எதற்காக ’புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்தீர்கள்? என்ன ஜோக் அடிக்கிறீர்களா? ரசிகர்களின் உணர்வுகளோடு ஏன் விளையாடுகிறீர்கள்? ’புஷ்பா 2’ படத்தின் குழுவினர்களை நீதிமன்றத்துக்கு இழுப்பேன் என்று மிரட்டி உள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The movie was releasing in June 2024. Why this has been shifted to Dec 2024.
— GlobalGlimpses✨ (@krunchi_hu) June 17, 2024
Is this a joke to the filmmakers. Playing with the emotions of audience.
On behalf of Puspha Community i will file a case in Court to release it ASAP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments