நடிகை ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்த ரசிகர்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ராஷ்மிகா மந்தனாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு தப்பி ஓடிய இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விஜய்தேவரகொண்டா நடித்த ’கீதாகோவிந்தம்’ மற்றும் ’டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை ராஷ்மிகா. இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ’சுல்தான்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க இவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து பெருமையாக பேசியவர் என்பதும் விரைவில் இவர் விஜய் படத்தின் நாயகியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவை திடீரென ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட்டார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை
இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ராஷ்மிகா இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் சகஜ நிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது
induke celebs selfie ivvataniki bhayapadatharu!??https://t.co/EtoFJpVRHq
— Asha Kiran Kumar (@meeashik) February 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments