ஆபாசமாக வர்ணித்த ரசிகர்: கமெண்ட் சொன்ன கணவரை அடித்து நொறுக்கிய நடிகை ஸ்ரேயா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஸ்ரேயா குறித்து ஆபாசமாக கமெண்ட் சொன்ன ரசிகருக்கு ஸ்ரேயாவின் கணவர் பதில் கூறிய நிலையில் அந்த பதிலை கேட்டு அவரை ஸ்ரேயா அடித்து நொறுக்கிய காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் என்பதும் இவர், ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் நடித்த பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்த நடிகை ஸ்ரேயா சரண் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு தனது ஃபாலோயர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடிய போது ஒரு ரசிகர் ’உங்கள் மார்பகங்கள் அழகாக இருக்கிறது’ என ஆபாசமாக வர்ணித்தார். இதைக்கேட்டு சிரித்த ஸ்ரேயா சரண் எனது கணவரை நோக்கி பார்க்க, அப்போது அவர் ’உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்’ என்று கூலாக பதில் அளித்தார்.
கணவரின் இந்த பதிலை கேட்டதும் சிரித்துக் கொண்டே அவரை செல்லமாக ஸ்ரேயா சரண் அடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவே நம்மூர் கணவர்களாக இருந்தால் ஆபாசமாக கமெண்ட் செய்தவரை கடுமையாக விமர்சனம் செய்திருப்பார். ஆனால் ரஷ்யாவை சேர்ந்த ஸ்ரேயாவின் கணவர் ரசிகரின் ஆபாச கமெண்ட்டை ஜாலியாக எடுத்துக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
I Agree With You Guys 🤣🤣🤣
— The_Green_Devil (@I_Am_Thala_Fan_) February 22, 2023
#ShriyaSaran 🥵🥵👌 pic.twitter.com/0a0nMmvPew
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments