அடக்கி வாசிக்க நினைத்தேன். ஆனால் பேச வைக்கின்றார்கள். கமல்ஹாசன்
- IndiaGlitz, [Wednesday,February 22 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் நிகழ்வுகள் குறித்து தனது ஆக்கபூர்வமான கருத்துக்கலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். அவருடைய விமர்சனத்தை தாங்க முடியாமலும், அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் சம்பந்தப்பட்டவர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் கருத்துக்கள் மக்களிடையே வன்முறையை தூண்டுவதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் ஒரு அரசியல் கட்சியில் காவல்துறையில் புகார் செய்தது.
இந்நிலையில் கமல்ஹாசனின் நற்பணி இயக்க பொறுப்பாளர் சுதாகர் என்பவரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது.
TN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது
நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கை மாறாது
எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர். நிரந்தரம் நம்நாடு'
இவ்வாறு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.