என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? ரசிகரின் கேள்விக்கு அஞ்சனாவின் கூல் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா ரங்கனிடம் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு அவர் கூலாக பதில் சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சன் தொலைகாட்சி உள்பட தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சன ரங்கன் என்பதும் இவர் ’கயல்’ படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது என்பதும் தெரிந்ததே.
குழந்தை பிறந்த பிறகு சிலகாலம் தொகுப்பாளினி பணியில் இருந்து ஒதுங்கி இருந்த அஞ்சன ரங்கன் தற்போது மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், விழாக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் வெற்றி விழாவை இவர் தொகுத்து வழங்கினார் என்பதும் அதில் சில சர்ச்சைகளும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் ’நான் உங்களை காதலிக்கிறேன், நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேள்வி கேட்டபோது, ‘எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான்’ என்று கூற, அதற்கு ’உங்களுடைய பயோடேட்டாவை படிக்காமல் இந்த கேள்வியை கேட்டு விட்டேன்’ என்று அந்த ரசிகர் கூற, அதற்கு அஞ்சனா ’நோ ப்ராப்ளம்’ என்று கூலாக பதில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments