ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணக்கூடாது? லாஸ்லியாவிடம் ரசிகர் கேட்ட கேள்வி!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் லாஸ்லியா என்பதும் அவர் தற்போது ’ஃபிரண்ட்ஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் லாஸ்லியா சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சேலை காஸ்ட்யூம் அணிந்த அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பகுதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் ’ஏன் நீங்களும் அஸ்வினும் மேரேஜ் பண்ணிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொரு ரசிகர் ’நீங்கள் கவின் கூட இருந்த போது ரொம்ப அழகாக இருந்தீர்கள், பட்? என்று கேள்விக்குறியோடு கமெண்ட் அளித்துள்ளார். இதே போல் பலரும் சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.