அஜித்தை நேரில் சந்தித்து 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்: 'தல' சொன்ன பதில் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் தற்போது ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் பைக் சேசிங் காட்சிகளும் இருப்பதால் தல அஜித் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் ‘வலிமை’ அப்டேட் குறித்த எந்த தகவலையும் எச் வினோத் போனிகபூர் உள்பட யாரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் பொங்கி எழுந்ததை அடுத்து அஜீத்தின் மேனேஜர் சமாதானப்படுத்தி ஒரு அறிக்கை விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஜித்தை அவரது ரசிகர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பின் போது அவரை நேரில் சந்தித்து உள்ளார்.
அஜித்துடன் பத்து நிமிடம் பேசியதாகவும் அப்போது ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து கேட்டபோது பிப்ரவரி இறுதியில் கண்டிப்பாக ‘வலிமை’ அப்டேட் வரும் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கிய அஜித்துக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் இருந்து அஜித்தின் ‘வலிமை’ அப்டேட் இம்மாத இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Last evening met #ThalaAjith sir at #Valimai️ set's and 10mins we enjoyed with him and when we asked him #ValimaiUpdate he told by February end will get All updates. Really humbled sir for giving us appointment. pic.twitter.com/1R9GKgJBS2
— Harishsayz (@sonusoodharish) February 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com