அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை வேண்டும். பிரபல பாடலாசிரியை

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. நீதி நிச்சயமாக ஒருநாள் வெல்லும் என்று நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது மதிப்பும் மரியாதையும் இந்த தீர்ப்பால் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பை பலர் வரவேற்றுள்ள நிலையில் பிரபல பாடலாசிரியை தாமரை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், 'அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இவருடைய கருத்துப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 நாள் சிகிச்சை பெற்றபோது நடந்தது என்ன? என்பது குறித்து இனியாவது உண்மையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

More News

சட்டம் சத்தியத்தின் பக்கமே. ஆர்.பார்த்திபன்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து திரையுலகினர் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்....

தப்பான ஆளு வெல்லும் காலம் எப்போதும் இல்லை. கமல்ஹாசன்

சசிகலா உள்பட மூவரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து.

சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தை தற்போது பார்ப்போம்...

கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் நுழைந்தது போலீஸ் படை. பெரும் பரபரப்பு

உச்சநீதிமன்றத்தின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் சசிகலா தங்கியிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். ..

10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. சசிகலாவின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளியா?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது...