ஐபிஎல் தொடக்க விழாவில் பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் ஹைலைட்டே போட்டியின் தொடக்க விழாவும் இறுதி விழாவும் தான் என்பதும் குறிப்பாக ஐபிஎல் போட்டியின் தொடக்க விழாவில் பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து வருவது தெரிந்ததே

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கவிழாவில் டைகர் ஷெராப், ஷராதா கபூர், ப்ரினிதி சோப்ரா, எமிஜாக்சன் போன்றோர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண்தவான், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ப்ரினிதி சோப்ரா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் தென்னிந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் தற்போது தொடக்க விழா நிகழ்ச்சியில் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டு சூப்பர் டான்ஸ் ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த ரன்வீர்சிங், உடல்நலக்கோளாறு காரணமாக கலந்து கொள்ளவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தியே.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொடக்க விழா நிகழ்ச்சி வண்ணமயமாக கலைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது

காவிரிக்காக ஐபிஎல் போட்டியை தடை செய்யலாமா?: ஆதரவும் எதிர்ப்பும்

காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டி ஒரு கேடா? என்றும், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்

ஐபிஎல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்: தமிழக எம்.எல்.ஏ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்றும் மீறி நடத்தினால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மு.தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.

திருச்சியில் இறங்கியது கமல் செய்த முதல் மனிதாபிமான செயல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று அவர் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சி சென்றார்.

காவிரிக்காக ஐபிஎல் போட்டியை உதறிய வர்ணனையாளர்

காவிரி பிரச்சனை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டிய நேரம் இதுதான் என்பதை சரியாக புரிந்து கொண்ட தமிழக மக்கள்