'Squid Game' வெப்தொடருக்கு டப்பிங் கொடுத்தவர் இந்த பிரபல தமிழ் நடிகரா? ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

கடந்த செப்டம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ’Squid Game' என்ற வெப்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த தொடர் 94 நாடுகளில் 111 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை பார்த்துள்ளனர் என்று நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ’மணி ஹெய்ஸ்ட்’ தொடருக்கு இணையாக இந்த தொடரும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடர் தற்போது தமிழிலும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் ஒரு முக்கிய கேரக்டருக்கு தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் டப்பிங் செய்து உள்ள தகவலை நேற்று அதிகாரபூர்வமாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த தொடரில் 74 வயது நடிகர் யங் சூ என்பவரின் கேரக்டருக்கு தான் டப்பிங் பேசி உள்ளதாகவும் மிகச்சிறப்பாக இந்த டப்பிங் வந்துள்ளதாகவும் நாசர் கூறிய வீடியோவையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற வெப்தொடர் ஒன்றில் தமிழ் நடிகர் நாசர் டப்பிங் பேசி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்ததுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.