மொத்த பணத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கிய பாடகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவை சேர்ந்த பிரபல பாடகர் உன்னிமேனன் தனது மகனின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
பாடகர் உன்னிகிருஷ்ணன் மகன் அங்குருக்கும் துபாயை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது
இந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான உயிர்களும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களும் சேதம் அடைந்து கேரள மாநிலமே நிலைகுலைந்துள்ளது.
இந்த நிலையில் கேரள வெள்ள நிவாரண நிதியாக பல்வேறு தரப்பினர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் கொடுத்து வரும் நிலையில் தனது மகனின் திருமண செலவுக்காக வைத்திருந்த மொத்த பணத்தையும் பாடகர் உன்னிமேனன் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
ஒட்டுமொத்த கேரள மக்களும் துன்பத்தில் இருக்கும் நிலையில் தனது மகனுக்கு ஆடம்பர திருமணம் தேவையில்லை என்றும் திருமணத்தை மிக எளிமையாக கோவிலில் நடத்திவிட்டு அதற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளேன் என்று உன்னி மேனன் தெரிவித்துள்ளார். உன்னிமேனனின் இந்த முடிவுக்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout