ஆப்கான் மோதல்....! பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி கொலையுண்ட பரிதாபம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாலிபான்களுக்கும் - பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், ஆப்கானிஸ்தானில் கடும் மோதல் நிலவி வருகிறது. இதை படம்பிடிப்பதற்காக சென்ற இந்தியாவைச் சார்ந்த பிரபல புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி, அங்கு கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான், கந்தஹாரில் சென்ற ஒரு வாரமாகவே, ஆப்கன் படைகளுக்கும், தாலிபான்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகின்றது. இதை பதிவு செய்வதற்காக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி, அங்கு சென்று பதிவு செய்து வந்தார். அப்போது தாலிபான்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக திடீரென தாக்குதல் நடத்தினர். அச்சமயத்தில், அங்குள்ள பகுதியில் இருக்கும் கடைக்காரர்களிடம் சித்தகி பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக, கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை நிறுவனத்திற்கு அவர் இன்று காலையில் கூறியுள்ளார்.இந்தநிலையில் தாலிபான்கள் அங்கிருந்து பின்வாங்கி சென்றதும், சித்தகிக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகிறது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுனத்தின் தலைமை அதிகாரி மைக்கேல் ஃப்ரீடன்பெர்க் மற்றும் தலைமை ஆசிரியர் அலெஸாண்ட்ரா கல்லோனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
"டேனிஷ் சித்தகி மிகச்சிறந்த பத்திரிக்கையாளர், அன்பான கணவர், அர்ப்பணிப்புள்ள தந்தை மற்றும் நாங்கள் நேசம் வைத்துள்ள ஊழியர். இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் அவரின் குடும்பத்தினருடன் இருக்க கடமைபட்டிருக்கிறோம். அவர் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள, ஆப்கானில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
டேனிஷ் சித்தகி:
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சித்தகி மும்பையைச் சேர்ந்தவர். சென்ற 2018-ல் தன்னுடன் பணிபுரிந்த அட்னன் அபிடி என்பவருடன் இணைந்து, புகைப்படத்துறையில் மிக உயரிய விருதான "புலிட்சர் விருதை" பெற்றிருந்தார். ரோஹிஞ்சா சமூகத்தினர் மியான்மரில் வசித்து வருகிறார்கள். அவர்கள் எதிர்கொண்ட வன்முறை குறித்து தான் இவர்கள் ஆவணம் செய்ததற்கு, இந்த உயர் விருது வழங்கப்பட்டது.அண்மையில் கொரோனா 2-ஆம் தாக்கத்தின் போது, இந்தியாவில் டெல்லியில் உள்ள இடுகாட்டில் அதிக அளவில் பிணங்கள் எரிக்கப்பட்டது. இதை சித்தகி படம்பிடித்தது தான் உலகளவில் வைரலானது, அனைத்து மீடியாக்களிலும் பேசுபொருளாக மாறியது. இதேபோல் இவர் எடுத்த பல புகைப்படங்கள் உலகளவில் பிரபலமானது.
"செய்திகளை சேகரிக்க எனக்கு பிடிக்கும், ஆனால் மனிதனின் உணர்ச்சியை படம்பிடிப்பது போல வேறு ஒன்றும் இருக்காது" என்று சித்தகி ஒருமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments