தமிழ்த் திரையுலகில் அடுத்த சோகம்… பிரபல நடன இயக்குநர் சம்பத்ராஜ் உயிரிழப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இயக்குநர் மனோபாலா இறந்த சோகத்தில் இருந்தே பலரும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது தமிழ் திரையுலகில் காதல்கோட்டை உள்ளிட்ட 1,000 திரைப்படங்களுக்கும் மேல் நடனம் அமைத்த நடன இயக்குநர் சம்பத்ராஜ் தற்போது உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனம் அமைத்தவர் சம்பத்ராஜ். நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த காதல்கோட்டை, அமராவதி போன்ற படங்களுக்கும் இவர்தான் நடனம் அமைத்திருந்தார்.
இந்நிலையில் 54 வயதான நடன இயக்குநர் சம்பத்ராஜ்க்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் திடீரென சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதையடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுநீரம் தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது தமிழ் திரையுலகில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடன இயக்குநர் சம்பத்ராஜ்ஜின் உடல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாலை 4 மணிக்கு ஊர்வலம் நடக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com