தமிழ்த் திரையுலகில் அடுத்த சோகம்… பிரபல நடன இயக்குநர் சம்பத்ராஜ் உயிரிழப்பு!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

நடிகர், இயக்குநர் மனோபாலா இறந்த சோகத்தில் இருந்தே பலரும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது தமிழ் திரையுலகில் காதல்கோட்டை உள்ளிட்ட 1,000 திரைப்படங்களுக்கும் மேல் நடனம் அமைத்த நடன இயக்குநர் சம்பத்ராஜ் தற்போது உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனம் அமைத்தவர் சம்பத்ராஜ். நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த காதல்கோட்டை, அமராவதி போன்ற படங்களுக்கும் இவர்தான் நடனம் அமைத்திருந்தார்.

இந்நிலையில் 54 வயதான நடன இயக்குநர் சம்பத்ராஜ்க்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் திடீரென சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதையடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுநீரம் தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது தமிழ் திரையுலகில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடன இயக்குநர் சம்பத்ராஜ்ஜின் உடல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாலை 4 மணிக்கு ஊர்வலம் நடக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

More News

பிறந்த நாளில் த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த 'லியோ' படக்குழு..! வைரல் புகைப்படம்..!

 நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் த்ரிஷா பிறந்த நாளை

சொக்கத் தங்கமே… ஒரு இன்ஸ்டா புகைப்படத்திற்காக நிவேதா பெத்துராஜை கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

கர்ப்பமான வயிற்றை வீடியோ எடுத்து வெளியிட்ட இலியானா..!

நடிகை இலியானா திருமணம் செய்து கொண்டதாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

நான் இன்னும் சாகல.. திரும்பி வருவேன்.. ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்..!

ரசிகரின் ட்விட் ஒன்றுக்கு பதில் அளித்த இயக்குனர் செல்வராகவன் 'நான் இன்னும் சாகவில்லை அல்லது ரிட்டயர் ஆகவில்லை, கண்டிப்பாக திரும்ப வருவேன்' என்று பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' பரபரப்புக்கு இடையே ஏஆர் ரஹ்மான் பகிர்ந்த வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்..!

'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் இது குறித்த சட்ட