விஜய்சேதுபதியுடன் நடிக்க விரும்பிய பிரபல நடிகையின் மகள்!

விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என பிரபல நடிகையின் மகள் விருப்பம் தெரிவித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் கலக்கி வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் என தெரிவித்து உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த தகவலை விஜய் சேதுபதியுடன் போன் மூலம் தெரிவித்ததாகவும் அதற்கு விஜய் சேதுபதி ஆச்சரியம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விரைவில் ஜான்வி கபூர் தமிழ் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாவார் என்றும் அது அனேகமாக விஜய் சேதுபதி படமாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் ஹிந்தி ரீமேக் படமான ‘குட்லக் ஜெர்ரி’ என்ற படத்தில் நயன்தாரா கேரக்டரில் ஜான்வி கபூர் நடித்திருந்தார் என்பதும், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் நேரடி தமிழ் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.