கணவரை பிரியும் பிரபல நடிகை.....! புதுவாழ்க்கையை துவங்க முடிவு...?

  • IndiaGlitz, [Wednesday,September 01 2021]

நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ்குந்த்ராவை விட்டு விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டிக்கும், அவரது கணவர் ராஜ்குந்த்ரா-வுக்கும் ஒருமகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா தனது குடும்பத்துடன் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் ஆபாச படங்களை தயாரித்து, விற்பனை செய்த குற்றத்திற்காக இவரது கணவர் ராஜ்குந்த்ரா மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலிவுட் சினிமாவில் இப்பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஊடகங்களில் இச்செய்தி தீயாய் பரவியது. இக்குற்றத்தில் ராஜ்குந்த்ரா-வுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், அவருக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டி கணவரையும், அவர் சார்ந்த விஷயங்களையும் பிரிந்து, புது வாழ்க்கையை வாழ முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்த தகவல்கள் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஷில்பா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.