எலான் மஸ்க் வாங்கியதால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிவிட்டதை அடுத்து டுவிட்டரில் இருந்து தான் விலகுவதாக பிரபல நடிகை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. டுவிட்டர் நிறுவனம் கைமாறியதை அடுத்து டுவிட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் கூறிய போது, ‘இனி டுவிட்டருக்கு இருண்ட காலம் என்றும் என்ன வேண்டுமானாலும் டுவிட்டரில் நடக்கலாம் என்றும் கூறியிருந்தார் .
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து தனது டுவிட்டர் கணக்கில் இருந்து விலகுவதாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் அறிவித்துள்ளார். கடைசியாக அவர் தனது டுவிட்டரில் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ’எனது கடைசி டுவிட் இதுதான்’ என்றும் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதால் பிரபல நடிகை ஒருவர் டுவிட்டரில் இருந்து வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Ah he got twitter. I would like this to be my what lies here as my last tweet. Just really *any* excuse to show pics of Barold. I fear this free speech bid is going to help this hell platform reach its final form of totally lawless hate, bigotry, and misogyny. Best of luck. ❤️ pic.twitter.com/fBDOuEYI3e
— Jameela Jamil ?? (@jameelajamil) April 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments