வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் செம டான்ஸ்: நடன இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பின்னர் முக்கிய வேடத்தில் நடித்துவரும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சுராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் வடிவேலு, ராஜா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனீஸ்காந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் முன்னணி நடிகர் பிரபுதேவா இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் ஒன்றின் நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிய இருப்பதாகவும் அவர் வடிவேலுவுக்கு நடன பயிற்சி அளிக்க உள்ளதாகவும் லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ’காதலன்’ ’ரோமியோ ஜூலியட்’ உள்பட பல திரைப்படங்களில் பிரபுதேவா மற்றும் வடிவேலும் இணைந்து நடனம் ஆடி உள்ள நிலையில் தற்போது வடிவேலுவின் படத்திற்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரியவுள்ளார்.
சமீபத்தில் வடிவேலு மற்றும் பிரபுதேவா இணைந்த ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது இருவரும் ஒரே படத்தில் பணிபுரியவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
Excited to announce @PDdancing master has choreographed a song for #NaaiSekarReturns ??
— Lyca Productions (@LycaProductions) April 18, 2022
Witness our #VaigaiPuyalVadivelu's thaaru maaru moves again... ????@Director_Suraaj @Music_Santhosh @iamshivani_n @UmeshJKumar @EditorSelva @arun_capture1 @proyuvraaj @teamaimpr ©️ ??Original pic.twitter.com/KKroTcOj1z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com