பிக்பாஸ் வீட்டில் திடீரென பாசமழை, ஆனந்தக்கண்ணீர்: காரணம் இதுதான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் 75 நாட்கள் முடிந்த பின்னர் ஃபேமிலி வாரம் வரும் என்பதும் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து நிகழ்ச்சியை நெகிழ்ச்சி அடைய செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் இந்த வாரம் ஃபேமிலி வாரம் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளதை அடுத்து போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வரும் காட்சி இன்றைய முதல் புரோமோவில் உள்ளது .
முதல் கட்டமாக பூர்ணிமாவின் அம்மா வருகை தர, அவரை பூர்ணிமா கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் விடுகிறார். இதனை அடுத்து அர்ச்சனாவின் அம்மாவும் அப்பாவும் வருகின்ற போது, அவரும் உணர்ச்சி வசப்பட்டு அப்பாவை கட்டி பிடிக்கிறார். மேலும் விக்ரம் சரவணனின் அப்பா அம்மா, விஜய் வர்மாவின் அம்மா ஆகியோர் வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டிற்கு வரும் குடும்ப உறுப்பினர்கள் கடந்த சீசன்கள் போல் வெளியில் என்ன நடக்கிறது என்பதை போட்டியாளர்களின் கூறி சுதாரிக்க வைப்பார்களா? இந்த நிகழ்வுக்கு பின்னர் போட்டியாளர்களின் விளையாட்டு தன்மை மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments