மாலை மரியாதையுடன் வரவேற்கப்பட்ட அர்ச்சனா: குடும்பத்தினர்களின் நெகிழ்ச்சி வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் அர்ச்சனா என்பது தெரிந்ததே. அர்ச்சனா தான் வெளியேறுவார் என்பதை அந்த வீட்டிலுள்ளவர்கள் யாருமே நம்பவில்லை. திடீரென அவர் வெளியேறியதும் அனைவருக்கும் குறிப்பாக ரியோ, சோம் மற்றும் கேபி ஆகிய மூவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நேரத்தில் கூட ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காமல் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் விடைபெற்றுக் கொண்டு சென்றவர் அர்ச்சனா. இந்த நிலையில் தற்போது அர்ச்சனா தனது வீட்டில் நுழையும் காட்சி குறித்த நிகழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது.
வீட்டில் நுழைந்தவுடன் அவருக்கு ஆரத்தி எடுப்பதும், அவருடைய அன்பு மகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், அம்மாவை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்வதும், கேக் வெட்டும் காட்சிகள் உள்பட பல நெகிழ்ச்சியான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. அந்த வீடியோவின் இறுதியில் ’பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பாரதியின் வாசகத்துடன் வீடியோ முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா விளையாடிய விதம் குறித்து சர்ச்சைக்குரிய பல கருத்துகள் இருந்தாலும் அவர் ஒரு தைரியமான பெண் என்பதும், எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவர் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments