திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு
- IndiaGlitz, [Monday,May 25 2020]
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என ஒரிசா மாநில ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் காதல் உருவாகியதை அடுத்து அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்ய அந்த இளைஞர் மறுத்ததாகவும் இதன் காரணமாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.
இந்த புகாரின் அடிப்படையில் பலாத்கார பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது பலகாரம் என்ற சட்டப்பிரிவு குறித்து ஐகோர்ட்டு நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். பலாத்காரம் என்பது ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக உறவு கொள்வது என்றும் மிரட்டி அல்லது பெண்ணின் சம்மதமில்லாமல் உறவு கொள்வது என்றும், மயக்க மருந்து கொடுத்தோ அல்லது 18 வயதுக்கு கீழ் உள்ள மைனர் பெண்ணுடன் உறவு கொள்வது என்றும் தெரிவித்தார்.
ஆனால் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடைய சம்மதத்துடன் உடலுறவு கொண்டுவிட்டு அதன் பின்னர் திருமணத்திற்கு மறுப்பது என்பது பலாத்காரம் பிரிவில் வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டு, அதன் பின்னர் கர்ப்பமடைந்ததும் திருமணம் செய்ய மறுப்பது என்ற மனப்போக்கு கவலைக்குரியது என்றும் இருப்பினும் இந்த குற்றம் பலாத்காரம் பிரிவின் கீழ் சேர்க்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.